முக்கியச் செய்திகள்
Home / பொழுதுபோக்கு / சினிமா / “சினிமாவில் கஷ்டப்பட்டு கதாநாயகனாக உயர்ந்தேன்” பட விழாவில் விஜய் சேதுபதி பேச்சு
201608080122068580_I-became-Hero-after-Heavy-struggles-says-Emerging-Actor_SECVPF

“சினிமாவில் கஷ்டப்பட்டு கதாநாயகனாக உயர்ந்தேன்” பட விழாவில் விஜய் சேதுபதி பேச்சு

சென்னை,

“சினிமாவில் அறிமுகமானபோது செலவுக்கு 100 ரூபாய் மட்டுமே கிடைத்தது. கஷ்டப்பட்டு கதாநாயகனாக உயர்ந்தேன்” என்று நடிகர் விஜய் சேதுபதி பட விழாவில் பேசினார்.

தர்மதுரை

விஜய் சேதுபதி, தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் தர்மதுரை. இந்த படத்தை சீனுராமசாமி டைரக்டு செய்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். தர்மதுரை படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். விஜய் சேதுபதி கூறியதாவது:-

“நான் சினிமாவுக்கு வந்த புதிதில் பட வாய்ப்புகள் தேடி அலைந்தேன். சிறுசிறு வேடங்கள்தான் கிடைத்தன. டைரக்டர் சீனுராமசாமி எனக்கு அவ்வப்போது செலவுக்கு 100 ரூபாய் தருவார். வருத்தப்படாதே பெரிய நடிகராக வருவாய் என்று உற்சாகப்படுத்தவும் செய்வார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் வேறு வேலைக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தேன்.

கஷ்டப்பட்டேன்

அப்போது சீனுராமசாமி என்னிடம் அவர் எழுதி இருந்த கதையை படிக்க கொடுத்து அதில் நீதான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றார். அந்த படம் தான் தென்மேற்கு பருவக்காற்று. அதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் இருந்தால் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்து இருக்க முடியாது. கஷ்டப்பட்டுதான் கதாநாயகனாக உயர்ந்தேன்.

எனக்கு சீனுராமசாமிதான் தர்மதுரை. நான் யார், எனது பின்புலம் என்ன என்று தெரியாமலேயே வாய்ப்பு கொடுத்தார். தர்மதுரை சிறந்த படமாக தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு என்னை 2010-ஆம் ஆண்டுக்கு கூட்டிச்சென்றது. அந்த காலகட்டத்தில் எனக்குள் கலக்கம் ஏக்கம் போன்றவை இருந்தன. அதை இப்போது நினைக்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. தர்மதுரை படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மனித உணர்வுகள்

இந்த படத்தில் மனித உணர்வுகள் இருக்கும் ஈரம் இருக்கும். பெண்களின் பெருமையை பேசும் படமாகவும் இருக்கும். கதை சுவாரஸ்யமாகவும் முடிச்சுகள்-திருப்பங்கள் கொண்டதாகவும் இருக்கும். தமன்னாவும் சிறப்பாக நடித்து இருக்கிறார். என் சினிமா வாழ்க்கையில் தர்மதுரை முக்கிய படமாக இருக்கும்.”

இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.

Check Also

201607140452400874_Goa-Dubai-London-Paris-Anushka-Kajal-Agarwal_SECVPF

கோவா, துபாய், லண்டன், பாரீஸ் அனுஷ்கா, காஜல் அகர்வால், சுருதிஹாசன், தமன்னாவுக்கு பிடித்த இடங்கள் ‘‘ஓய்வில் சுற்றிப்பார்த்து மகிழ்ச்சி அடைவோம்’’

சென்னை, பிடித்த இடங்களை சுற்றிப்பார்த்து ஓய்வு நேரத்தை கழிப்பதாக நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, சுருதிஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் கூறினார்கள். …