முக்கியச் செய்திகள்
Home / இந்தியா / அருணாச்சல பிரதேசத்தில் கலிக்கோ புல் மறைவு எதிரொலி: பல்வேறு இடங்களில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
201608091922438484_Former-Arunachal-CM-found-dead-supporters-hold-protests_SECVPF

அருணாச்சல பிரதேசத்தில் கலிக்கோ புல் மறைவு எதிரொலி: பல்வேறு இடங்களில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இட்டாநகர்,
அருணாசலபிரதேச முன்னாள் முதல்–மந்திரி கலிகோபுல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் மர்ம இருப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள்  பல்வேறு இடங்களில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் இன்று தனது வீட்டில் இறந்து கிடந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த மாதம் முதல் மந்திரி பதவியை இழந்த பின்னர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் கலிகோபுல் தற்கொலை செய்துகொண்ட தகவல் மாநிலம் முழுவதும் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் இட்டா நகரின், நிதி பீகார் பகுதியில் வசித்து வரும் முதல்–மந்திரி பிமா காண்டுவின் பங்களாவை முற்றுகையிட்டனர்.
கலிகோபுல்லின் சாவில் மர்மம் இருப்பதாக கோஷம் எழுப்பிய அவர்கள் இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தினர்.
கலிகோபுல்லின் உடலை வெளியே எங்கும் கொண்டு செல்ல விடமாட்டோம், உடலை முதல்–மந்திரியின் இல்லத்திலேயே அடக்கம் செய்யவேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கலிகோபுல் ஆதரவாளர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
கலிகோபுல்லின் மறைவையொட்டி மாநிலத்தில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அருணாசலபிரதேச அரசு அறிவித்து உள்ளது.
கலிகோபுல்லின் மரணத்துக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

Check Also

201608090115095939_Kannada-Telugu-Malayalam-Odia-languages-High-Court-judge_SECVPF

கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி …