முக்கியச் செய்திகள்
Home / இந்தியா / புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை படகுடன் சிறைபிடித்தது
201608091123325144_Pudukkottai-fishermen-4-people-arrested_SECVPF

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை படகுடன் சிறைபிடித்தது

புதுக்கோட்டை  மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த   500-க்கும்  மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை 137 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.விசைப்படகில்     வைரக் கண்ணு மகன் கணேஷ்குமார், பிச்சைபாண்டி, முகமதுகான் மற்றும் ஒருவர் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான       நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண் டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்த இலங்கை     கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 4 பேரை யும்  விசைப்படகுடன்  சிறைப் பிடித்தனர்.  பின்னர்  4  பேரை யும் கைது செய்து, விசார ணைக்காக    காங்கேசன் துறைமுகத்திற்கு    அழைத்து சென்றனர்.

இதனிடையே 4 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட   தக வலை அறிந்த அவரது குடும் பத்தினர் மற்றும்  ஜெகதாப் பட்டினம் மீனவர்கள் அதிர்ச் சியடைந்தனர்.  அவர்கள் சிறைப்  பிடிக்கப்பட்ட  மீன வர்களை   மீட்க    மத்திய- மாநில அரசுகள் உரிய நடவ டிக்கை   எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள் ளனர்.

Check Also

201608090115095939_Kannada-Telugu-Malayalam-Odia-languages-High-Court-judge_SECVPF

கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி …