முக்கியச் செய்திகள்
Home / இந்தியா / கருணாநிதியுடன், ஆந்திர கல்வி மந்திரி சந்திப்பு; கும்பமேளா விழாவில் கலந்து கொள்ள அழைப்பு
201608090528132921_With-Karunanidhi-AP-Education-Minister-Meets-Are-invited_SECVPF

கருணாநிதியுடன், ஆந்திர கல்வி மந்திரி சந்திப்பு; கும்பமேளா விழாவில் கலந்து கொள்ள அழைப்பு

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஆந்திர மாநில கல்வி மந்திரி கண்ட ஸ்ரீனிவாசலு நேற்று சந்தித்தார்.

அப்போது ஆந்திராவில் நடைபெற உள்ள கும்பமேளா திருவிழாவான புஷ்கரம் கிருஷ்ணா விழாவில் கலந்து கொள்ள வருமாறு கருணாநிதிக்கு அழைப்பிதழ் வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும், ரேனிகுண்டாவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் வலியுறுத்துமாறும் அவரை கருணாநிதி கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகளும் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினர்.

Check Also

201608090115095939_Kannada-Telugu-Malayalam-Odia-languages-High-Court-judge_SECVPF

கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி …