முக்கியச் செய்திகள்
Home / தொழில்நுட்பம் / நாசா வெளியிட்ட புதிய வீடியோ மேற்பரப்பில் சூரிய குழம்பு மழைபோல் பீய்ச்சி அடிக்கும் சூரியன்
201608081743203391_IRIS-Spots-Plasma-Rain-on-Suns-Surface_SECVPF

நாசா வெளியிட்ட புதிய வீடியோ மேற்பரப்பில் சூரிய குழம்பு மழைபோல் பீய்ச்சி அடிக்கும் சூரியன்

புரிந்து கொள்ள முடியாத சூரியனின் மர்மங்கள் குறித்து அறிந்து கொள்ள நாசா விஞ்ஞானிகள்  தொஅடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர். மீண்டும் ஒரு முறை அமெரிக்க விண்வெளி நிறுவனம், சூரியனின் மேற்பரப்பில் சூரியன் வெப்பத்தை உமிழ்வதையும், மற்றும் மேற்பரப்பு பிளாஸ்மா சிதறுவதையும் படம் பிடித்து புகைபடஙகள் மற்றும் வீடியோவை வெளியிட்டு உள்ளது.

தற்போது  நாசாவின் ஐஆர்ஐஎஸ் சூரியனின் நடு பகுதியில் உள்ள தீவிர உஅயர் ஆற்றல் கதிர் வீச்சை படம் பிடித்து உள்ளது.சக்தி வாய்ந்த வெடிப்புகளின்  ஒவ்வோரு முறையும் ஆற்றல் வாய்ந்த கதிர் வீச்சு மூலம்  சூரியனில் இருந்து  காந்த சக்தி வெளிப்படுகிறது. இதனால் விண் வெளியில்  சூரியனை சுற்றி உள்ள வளிமண்டலம் வெப்ப படுத்தப்படுகிறது.
இதனால் புத்துணர்ச்சியுடன் கூடிய உள்ள துகள்கள் வெளிப்படுகின்றன.சூரியன் தொடர்ந்து  தன்னுடைய அமைப்பை மார்றி கொண்டே உள்ளது.

ஐஆர்ஐஎஸ் சின் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ   சூரியன் குறித்து அதிக அளவு தகவல்கள் அறிந்து கொள்ள நாசா விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கும்.

ஐஆர்ஐஎஸ் பிடித்துள்ள 9 வினாடி வீடியோவை நாசா வெளியிட்டு உள்ளது.சூரிய மேற்பரப்பில் வெடிப்புகள்மூலம் சூரிய குழம்பு (கதிர் வீச்சு ஆற்றல்) மழைபோல் மேல் எழும்புகிறது அது சாய்வாகவும் மழைபோல் கதிர்வீச்சை வெளியிடுகிறது.

சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் தொடர்ந்து இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் வெப்பம், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதே போல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சத்தால்தான் நமக்கு பகலில் வெளிச்சம் கிடைக்கிறது.. சூரியன் நீண்ட தூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. இதனால்தான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். சூரியனில் ஏற்படும் வெடுப்புகளினால் சூரிய புயல் உருவாகிறது.

Check Also

201607140230545008_The-worlds-first-solar-plane-completes-the-journey-back_SECVPF

உலகின் முதல் ‘சோலார் விமானம்’ உலகநாடுகளில் பயணத்தை முடித்து மீண்டும் அபுதாபி வருகிறது

அபுதாபி, உலகில் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கக்கூடிய முதல் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானம் அபுதாபியில் இருந்து முதன் முதலாக …