முக்கியச் செய்திகள்
Home / வணிக செய்திகள் / உலக வணிகம் / போக்கிமோன் கோ விளையாட்டு ஒரு மாதத்தில் சுமார் ரூ.1336 கோடி வருவாய்
201608081654498106_Pokemon-Go-earns-200-million-in-first-month_SECVPF

போக்கிமோன் கோ விளையாட்டு ஒரு மாதத்தில் சுமார் ரூ.1336 கோடி வருவாய்

கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதேமாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.

கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.

இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஒரு மாத முடிவில் போக்கிமோன் கோ சுமார் ரூ.1336 கோடி( 200 மில்லியன் டாலர்)களை உலகம் முழுவதும் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது கேண்டி கிரஷ் சோடா சகா, கிளாஷ் ராயல் ஆகிய விளையாட்டுக்கள் வெளியான 30 நாட்களில் சம்பாதித்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.

இந்தியா, சீனா நாடுகளில் போக்கிமோன் கோ பயன்பாட்டுக்கு வந்தால் இன்னும் அதிக லாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிபிஎஸ் மற்றும் கேமரா தொழில்நுட்பத்துடன் இணைந்து விளையாடும் இந்த ரியாலிட்டி கேமை ஆன் செய்தவுடன் மொபைல் போனின் ஜிபிஎஸ் உடன் இணைந்து விடும். நாம் நிஜத்தில் நகர்ந்தால் அந்த கேமில் நம்முடைய கேரக்டரும் நகரும். சில இடைவெளியில் ‘மான்ஸ்டர்கள்’ எனப்படும் குட்டிச்சாத்தான்கள் இருப்பதாக காண்பிக்கும். அந்த இடத்திற்கு நாம் நடந்து சென்றால் அவற்றை பிடிக்க முடியும். இப்படித் தான் இதை விளையாட வேண்டும்.

விளையாடும் அனைவரும் அந்த கற்பனை உலகிற்கு அழைத்து செல்வது போல் அமைந்துள்ளதால் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது இந்த போக்கிமோன் கோ. வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் விளையாடி கொண்டே ஏராளமான பணத்தை சம்பாதிக்கும் பொழுதுபோக்காகவும் இது உருவாகி வருகிறது.

ஒரு பயன்பாட்டாளர் (யூஸர்) பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் புதிய கணக்கை தொடங்கி இந்த போக்கிமோன் விளையாட்டுக்குள் நுழைந்து விட்டால், நீங்கள் எத்தனை கேரக்டர்களை வேட்டையாடுகிறீர்களோ.., அதற்கேற்ப இந்த கேமில் நீங்கள் பாயின்ட்களை (புள்ளிகள்) பெற முடியும். இப்படி, பாயிண்ட்கள் ஏற,ஏற அடுத்தடுத்த படிநிலைக்கு (லெவல்) நீங்கள் போகலாம். உங்கள் பாக்கெட்டில் பணம் சேர்ந்து கொண்டிருப்பதாக அர்த்தம்.

இப்படி அதிக பாயின்ட்களை பெறும் நபர்கள் தங்களது பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை மற்றவர்களுக்கு நல்ல விலைக்கு விற்கலாம். இதை விலைக்கு வாங்குபவர்கள் எவ்வித வலியும் இல்லாமல் கைவசமுள்ள விலைக்கு வாங்கிய பாயின்ட்களுடன் தங்களது திறமைக்கேற்ப மேலும் பல கேரக்டர்களை தேடி, கண்டுபிடித்து, வேட்டையாடி ஸ்கோரை உயர்த்தி கொள்ளலாம்.

பின்னர், அவர் விரும்பினால் தனது பாயின்ட்களை இன்னொருவருக்கு விற்று விடலாம். இப்படி குதிரை ரேஸ் பைத்தியம்போல் பலரை இந்த போக்கிமோன் கோ பித்தர்களாக அலைய வைத்து வருகிறது. இப்ப்படி, பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை ஏலம் விடுவதற்கான வசதியை ‘இபே’ உள்ளிட்ட இணைய ஏல நிறுவனங்கள் வழிவகுத்து தந்துள்ளன.

’லெவல்-20’ அளவில் உள்ள கணக்குகள் சுமார் ஒருலட்சம் ரூபாய் வரை இங்கு ஏலம் விடப்படுகிறது. இதை பலரும் வாங்கி வருகின்றனர். சமீபத்தில் ஒருவரது கணக்கின் பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல் சுமார் 6.50 லட்சம் ரூபாய் வரை ஏலம் போயுள்ளது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், முஸ்லீம்கள் போக்கிமோன் கோ விளையாட்டை விளையாடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று அங்குள்ள மத குருக்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த விளையாட்டு அபாயகரமானது என அவர்கள் கூறினர்.

இஸ்லாமிய சட்ட விவகாரங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கும் குழு ஒன்று, இஸ்லாமிய கல்வியாளர்களிடம் அந்த விளையாட்டில் இடம்பெறும் கேலிச் சித்திரங்கள் குறித்து கலந்து ஆலோசித்ததாக மூத்த மத குரு ஒருவர் கூறினார். இதுபோல் போக்கிமோன் விளையாட்டுக்கு போப் ஆண்டவரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

போக்கிமோன் கோ விளையாட்டானது மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக, இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், அது வெளியீடு கண்டுள்ள 40க்கும் அதிகமான நாடுகளில், அது பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுபோல் இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் உள்ள ரெபரலி உள்ள அலா ஹசரத் தர்ஹாவின் மதகுரு முப்தி முகமது சலீம் நூரி போக்கிமோனனுக்கு எதிராக பத்வா அறிவித்து உள்ளார்.

இந்த  விளையாட்டு வழிபாட்டு தளங்களுக்குள் நுழையவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்க கூடியதாவும் உள்ளது என கூறி உள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள கல்வியாளர்கள், மொபைல் விளையாட்டு எதிராக பாத்வா கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

Check Also

enbridge-pipeline-720x480

இயற்கை எரிவாயு கட்டணத்தில் குறைவை காணும் Enbridge வாடிக்கையாளர்கள்

ரொறொன்ரோ Enbridge எரிவாயு விநியோகஸ்தர்களிடம் இருந்து சேவையினைப் பெறும் வாடிக்கையாளர்கள் இயற்கை எரிவாயு கட்டணக் குறைப்பின் பயனை அடைவார்கள் என Enbridge தெரிவித்துள்ளது. …