முக்கியச் செய்திகள்
Home / தொழில்நுட்பம் / 20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் முடிவு
google-collect-mony-for-rufugees-170915-380-world-seithy

20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் முடிவு

ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட ஆன்டிராய்ட் தொடர்பாக இந்தியாவை சேர்ந்த 20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த பயிற்சியை இந்த வருடமே, தனியார் பல்கலைகழகங்கள் மற்றும் பயிற்சி பாடசாலைகளில் நேரடியாக சென்று இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளது.

அதேபோல் மத்திய அரசின் தேசிய திறன் வளர்ச்சி கழகம் சார்பிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி மூலம் இந்தியாவை, மொபைல் வளர்ச்சியில் தலைமையாளராக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் 40 இலட்சம் ஆன்டிராய்டு பயிற்சி பெற்ற மென்பொருள் பொறியாளர்கள் இருப்பார்கள் எனவும், அதேசமயம் அமெரிக்காவில் இந்தியர்களை காட்டிலும் 3இல் ஒரு பங்கு மென்பொருள் பொறியாளர்களே இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Check Also

201607140230545008_The-worlds-first-solar-plane-completes-the-journey-back_SECVPF

உலகின் முதல் ‘சோலார் விமானம்’ உலகநாடுகளில் பயணத்தை முடித்து மீண்டும் அபுதாபி வருகிறது

அபுதாபி, உலகில் சூரியஒளி மின்சாரத்தால் இயங்கக்கூடிய முதல் ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற விமானம் அபுதாபியில் இருந்து முதன் முதலாக …