முக்கியச் செய்திகள்
Home / இலங்கை / ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை
2037169736Courts

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் கட்டளையை மீறிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்புப் பேரணியை கொழும்பு செரமிக் சந்தியூடாக முன்னெடுக்க வேண்டாம் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை பொலிஸாரின் அறிவிப்பிற்கு அமைய கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

SLFP-mahinda

தமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

இனவாதத்தை முன்னிறுத்தி  பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக   அரசியல் தீர்வு காணும்  செயற்பாட்டில்   தடைகளோ முட்டுக்கட்டைகளோ ஏற்பட்டுவிடும் என்று …