முக்கியச் செய்திகள்
Home / இந்தியா / மாணவர்கள் உள்பட மக்களை காப்பாற்ற முழு மதுவிலக்கை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
201607300015162225_Dr-Ramadoss-Report_SECVPF

மாணவர்கள் உள்பட மக்களை காப்பாற்ற முழு மதுவிலக்கை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள போதிலும், அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால், மது ஆதிக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பள்ளிக்கூடங்கள் படிப்படியாக குடிப்பகங்களாக மாறுவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. வேலூர் மாவட்ட பள்ளிகளில் நடந்த மது விருந்துகள் அதைத்தான் உறுதி செய்கின்றன.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் படிப்பதற்காக குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால், பள்ளிக்கூடங்களையே குடிப்பகங்களாக மாற்றும் அளவுக்கு சூழல் நிலவினால் தமிழகத்தின் எதிர்காலமாக பார்க்கப்படும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? என்ற அச்சம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் மதுவின் தீமைகள் சமுதாயத்தில் புரையோடிவிட்ட நிலையில், படிப்படியாக மதுவிலக்கு என்ற மருந்தை கொடுத்து சரி செய்ய முடியாது; முழு மதுவிலக்கு என்ற அறுவை சிகிச்சையின் மூலம் தான் குணப்படுத்த முடியும். எனவே, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் காக்க முழு மதுவிலக்கை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Check Also

201608090528132921_With-Karunanidhi-AP-Education-Minister-Meets-Are-invited_SECVPF

கருணாநிதியுடன், ஆந்திர கல்வி மந்திரி சந்திப்பு; கும்பமேளா விழாவில் கலந்து கொள்ள அழைப்பு

சென்னை, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஆந்திர மாநில கல்வி மந்திரி கண்ட ஸ்ரீனிவாசலு …