முக்கியச் செய்திகள்
Home / Banner / ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதை முறைப்படி ஏற்றுக்கொண்டார் ஹிலாரி கிளிண்டன்
201607291035188045_Hillary-Clinton-Accepts-Democratic-Presidential-Nomination_SECVPF

ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதை முறைப்படி ஏற்றுக்கொண்டார் ஹிலாரி கிளிண்டன்

வாஷிங்டன்,
அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால்,  புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (வயது 70) சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.  அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை (68), பிலடெல்பியாவில் நடந்த கட்சி மாநாட்டில் முறைப்படி நியமித்து நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தன்னை ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஹிலாரி கிளிண்டன் முறைப்படி ஏற்றுக்கொண்டார். பின்னர் நேற்று இரவு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனல்டு டிரம்ப் பிற உலநாடுகளிடம் இருந்து அமெரிக்காவை  பிரிக்க நினைக்கிறார். அவர் எதிர்காலத்தை பற்றிய பயத்தை உண்டாக்க விரும்புகிறார்.
 நாங்கள் எந்த மதத்திற்கும் தடை விதிக்க மாட்டோம். அனைத்து அமெரிக்கர்களுடன் இணைந்தே நாங்கள் பணியாற்றுவோம். எங்களது கூட்டணி பயங்கரவாதத்தை வீழ்த்துவதற்காகவே அமைந்தது. நமது நாடு பலவீனமானது என யாரும் நினைத்து விடாதீர்கள். நாங்கள் சுவர் எழுப்ப மாட்டோம். அதற்கு பதில் ஒவ்வொருவருக்கும் நல்ல வேலை கிடைப்பதற்காக பொருளாதாரத்தை உயர்த்துவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Check Also

201607291558318185_IS-executes-24-civilians-after-seizing-Syria-village-monitor_SECVPF

சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர்

பெய்ரூ, சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர் என்று கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. …