முக்கியச் செய்திகள்
Home / Banner / சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர்
201607291558318185_IS-executes-24-civilians-after-seizing-Syria-village-monitor_SECVPF

சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர்

பெய்ரூ,
சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர் என்று கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
வடக்கு சிரியாவில் குர்திஷ் – அரபியக் கூட்டணி படையிடம் இருந்து புயிர் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 மணி நேரத்தில் 24 பேரை படுகொலை செய்து உள்ளனர் என்று சிரியாவை சேர்ந்த கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆட்சியை அமைப்பதற்காக ராணுவத்துக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். அவர்கள் பொது இடங்களில் தற்கொலைப்படை, வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபடுவதால் அப்பாவி உயிர்கள் பலியாவது அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.
சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் இந்த பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக உலக நாடுகளின்படைகள் சண்டையிட்டு வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களிடம் சிக்கியவர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்து வருகின்றனர்.

Check Also

201607291035188045_Hillary-Clinton-Accepts-Democratic-Presidential-Nomination_SECVPF

ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதை முறைப்படி ஏற்றுக்கொண்டார் ஹிலாரி கிளிண்டன்

வாஷிங்டன், அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால்,  புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் …