முக்கியச் செய்திகள்
Home / உள்ளூர் செய்திகள் / அரசியல் / மின்ஸ்க் ஒப்பந்தத்தில் ரஷ்யா சாதகமான பங்குதாரர் இல்லை: ஜஸ்ரின்
Ukrainian President Petro Poroshenko, right, and Canadian Prime Minister Justin Trudeau smile as they talk to each other during a signing ceremony in Kiev, Ukraine, Monday, July 11, 2016. Trudeau oversaw the signing of a free trade agreement with Ukraine on Monday after he and his son spent the morning commemorating the victims of mass atrocities perpetrated by the Nazis and Soviets. (AP Photo/Efrem Lukatsky)

மின்ஸ்க் ஒப்பந்தத்தில் ரஷ்யா சாதகமான பங்குதாரர் இல்லை: ஜஸ்ரின்

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் மின்ஸ்க் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தமது கடப்பாடுகளின் அடிப்படையில் ரஷ்யா சாதகமான பங்குதாரராக விளங்கவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மின்ஸ்க் ஒப்பந்தத்தில் தமது பொறுப்புக்களுக்கு இசைவாக நாடாளுமன்றம் மற்றும் தமது நிறுவனங்களில் உக்ரைன் சில முக்கியமான மற்றும் கடினமான நடவடிக்கைகளை செய்துள்ளது. அதேபோன்று மின்ஸ்க் செயற்படுத்தல் பக்கத்தில் ரஷ்யா ஒரு நேர்மையான பங்குதாரர் இல்லை என்பதும் தெளிவாக உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ பெரோஷென்கோவுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே ஜஸ்ரின் ரூடோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கிவ்விற்கான விஜயத்தின் போது, உக்ரைனின் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக 13 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார். இந்த நிதியுதவியானது இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர், உணவு, தங்குமிடம் வழங்குவதற்கும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட உதவிகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பில் கனேடிய ஆய்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் பிரதமர் ஜஸ்ரின் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

Justin-Trudeau-01-720x480

Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின்

வான்கூவர் தீவின் டொபினோ எனப்படும் இடத்தில் மிக அறிய சமூகத்தினராக வாழும் Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியொன்றில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ …