முக்கியச் செய்திகள்
Home / உள்ளூர் செய்திகள் / அரசியல் / உக்ரைன் மேற்கு பகுதியில் இராணுவ பயிற்சிகளை பார்வையிட்டார் ஜஸ்ரின்
ukraine-trudeau-20160712

உக்ரைன் மேற்கு பகுதியில் இராணுவ பயிற்சிகளை பார்வையிட்டார் ஜஸ்ரின்

உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ உக்ரைனின் மேற்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள இராணுவத் தளத்தில் கனடா தலைமையில் இடம்பெறும் பயிற்சிகளை நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது ஜஸ்ரின் தனது மகனையும் அழைத்து சென்றிருந்தார்.

போலந்து எல்லைக்கு அருகில் 200 கனேடிய படையினர், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் அதிகாரிகள் இணைந்து உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சியளித்து வருகின்றனர். உக்ரைனிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் முடிவில் அங்கு சென்ற கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட உக்ரைனிய பிரதி பாதுகாப்பு அமைச்சர், ‘ கனேடிய பிரதமரின் இந்தய விஜயம் நேட்டோ தலைவர்களின் உச்சிமாநாடு முடிந்த பின்னர் நடைபெறுகின்றது. பிரதமர் வார்சோவிலிருந்து நேராக இங்கு வந்துள்ளார். நேட்டோ நாடுகளில் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் தமது ஆதரவுகளை அதிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளுக்காக 13 மில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்ததுடன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பில் கனேடிய ஆய்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அறிவுறுத்தியிருந்தார் என்பகது குறிப்பிடத்தக்கது.

 

Check Also

Justin-Trudeau-01-720x480

Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின்

வான்கூவர் தீவின் டொபினோ எனப்படும் இடத்தில் மிக அறிய சமூகத்தினராக வாழும் Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியொன்றில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ …