முக்கியச் செய்திகள்
Home / Banner / வெளிப்படைத்தன்மை பற்றிய விவாதத்தால் பலன் இல்லை ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் ரகசிய ஓட்டு
201607140302370436_There-is-debate-about-the-transparency-of-the-results-of-the_SECVPF

வெளிப்படைத்தன்மை பற்றிய விவாதத்தால் பலன் இல்லை ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் ரகசிய ஓட்டு

நியூயார்க்,

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31–ந்தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. ஒரு பெண் முதன் முதலாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது பான் கி மூன் விருப்பம்.

அந்த வகையில், ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

193 நாடுகளை கொண்ட ஐ.நா. சபையில், பொதுச்செயலாளர் தேர்தலில் வெளிப்படையான தன்மையை கொண்டு வர வேண்டும் என்று குரல் எழுந்தது.

இது தொடர்பாக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட உள்ள 12 பேரில் 10 பேர் தலா 5 பேரை கொண்ட இரண்டு குழுவாக பிரிந்து விவாதித்தனர். இதை உலகம் முழுவதும் அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால் இதில் பெரிதான பலன் இல்லை.

பார்வையாளர்களின் கேள்விகளுக்கு வேட்பாளர்கள் பதிலும் அளித்தனர். தலைமைத்துவ பாணி, பருவநிலை மாற்றம், சர்வதேச குற்றவியல் கோர்ட்டு, சிரியா உள்நாட்டுப் போர், தெற்கு சூடான் சண்டைகள் என பல பிரச்சினைகள் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனாலும் பொதுச்செயலாளர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் இருக்கும்; ரகசிய ஓட்டெடுப்பு தொடரும் என தெரிய வந்துள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு பொதுச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு வேட்பாளரை பரிந்துரைப்பதற்கு 15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு கவுன்சில் அடுத்த வாரம் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த உள்ளது. ஆனால் இதிலும் முடிவு முழுமையாக வெளிப்படையாக அறிவிக்கப்பட மாட்டாது என தகவல்கள் கூறுகின்றன.

Check Also

article-doc-e68of-268QLjqAsc11fa99818284c81dfd-720_634x422

ஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

சவுதி கூட்டுப்படை ஏமனில் நடத்திய தாக்குதலில், தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொது மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டில் …