முக்கியச் செய்திகள்
Home / உள்ளூர் செய்திகள் / அரசியல் / இங்கிலாந்து அரச தம்பதியினருக்கு கனேடிய பிரதமர் கனடா வருமாறு அழைப்பு!
prince-3_3590135b

இங்கிலாந்து அரச தம்பதியினருக்கு கனேடிய பிரதமர் கனடா வருமாறு அழைப்பு!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் இருவரும் தமது இரு குழந்தைகளுடன், கனடா வருமாறு கனேடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.

எப்பொழுதேனும் அவர்களிற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது கனடா வருமாறு அழைப்பு விடுத்துள்ளமையினால், அவர்கள் வருகை தரும் திகதி இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இங்கிலாந்து அரச தம்பதியினர், மீண்டும் ஒரு முறை கனடா வருவதற்கு வழிவகுத்த இந்த அழைப்பானது, கனேடிய மக்கள் மத்தியில் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அரச நிர்வாக தரப்பில் இதுவரை இதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இது குறித்த உத்தியயோகபூர்வ அறிவிப்புகள் மிகவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Check Also

Justin-Trudeau-01-720x480

Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின்

வான்கூவர் தீவின் டொபினோ எனப்படும் இடத்தில் மிக அறிய சமூகத்தினராக வாழும் Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியொன்றில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ …