முக்கியச் செய்திகள்
Home / வணிக செய்திகள் / உலக வணிகம் / சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு
201607061704428755_Chinese-air-force-puts-new-transport-aircraft-into-service_SECVPF

சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு

பெய்ஜிங்,

சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மற்றும் பெரிய போக்குவரத்து விமானம் ஒன்று சீன விமான படையில் இன்று சேர்க்கப்பட்டது.  ஒய்-20 என்ற அந்த விமானம் 200 டன்கள் எடை கொண்டது.  கடினமிக்க வானிலை சூழலிலும் சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றி கொண்டு நீண்ட தொலைவு செல்ல கூடியது.

இது பற்றி விமான படையின் செய்தி தொடர்பாளரான ஷென் ஜிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான படையில் ஒய்-20 விமானம் சேர்க்கப்பட்டு உள்ளது வலிமையை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள முக்கிய நடவடிக்கையின் அடையாளம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் அதிக மற்றும் சிறந்த போக்குவரத்து விமானங்கள் எங்களது விமான படைக்கு தேவையாக உள்ளன என்றும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் இந்த விமானம் முதன்முறையாக பறக்க தொடங்கியது.  ஒய்-20 விமானத்தின் தயாரிப்பு அந்நாட்டின் விமான மேம்பாட்டு திட்டத்தில் முக்கிய நடவடிக்கை என சீன விமான படை தெரிவித்துள்ளது.

சீனா நவீன மற்றும் புதிய ராணுவ தளவாடங்களை உருவாக்குவதில் ஆய்வு செய்து வருகிறது.  அவற்றில் நீர்மூழ்கி கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள் மற்றும் செயற்கை கோள்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் ஆகியவையும் அடங்கும்.

தென் சீன கடல் போன்ற எல்லைப்புற பகுதிகளில் சர்ச்சையை கிளப்பி அதிரடி அணுகுமுறைகளை சீனா மேற்கொண்டு வரும் நிலையில் இத்தகைய நடவடிக்கையினால் சீனாவின் அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கு பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.  சீன விமான படையினர் ரேடார் கண்காணிப்பில் தப்பி செல்லும் விமானங்களையும் உருவாக்கி வருகின்றனர்.

Check Also

201608081654498106_Pokemon-Go-earns-200-million-in-first-month_SECVPF

போக்கிமோன் கோ விளையாட்டு ஒரு மாதத்தில் சுமார் ரூ.1336 கோடி வருவாய்

கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதேமாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக …