முக்கியச் செய்திகள்
Home / வணிக செய்திகள் / உள்ளூர் வணிகம் / அமெரிக்காவிடம் 15 பில்லியன் டொலர்களை இழப்பீடு கோரும் டிரான்ஸ் கனடா
Trans-Canada-720x480

அமெரிக்காவிடம் 15 பில்லியன் டொலர்களை இழப்பீடு கோரும் டிரான்ஸ் கனடா

கனடாவின் எரிபொருள் நிறுவனமான ‘டிரான்ஸ் கனடா’, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து 15 பில்லியன் டொலர்களை இழப்பீட்டுத் தொகையாகக் கோரியுள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கீஸ்டோன் (Keystone) குழாய்த் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் நிராகரித்திருந்தார். இதனால் தமது நிறுவனம் பாரிய நட்டத்திற்கு உள்ளானதன் காரணத்தினாலேயே குறித்த இழப்பீட்டுத் தொகையைக் கோருவதாக டிரான்ஸ் கனடா நிறுவனம் கூறியுள்ளது.

மசகு எண்ணெய்யை படிப்படியாக மெக்சிகோ வளைகுடாவிற்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருக்கும் எண்ணெய் குழாய் வலையமைப்புகளை இணைப்பதற்கான வடிவமைப்பை கீஸ்டோன் எண்ணெய் குழாய் பணித்திட்டம் கொண்டிருந்தது.

எனினும், இந்த திட்டம் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்று தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதனை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Check Also

201608081654498106_Pokemon-Go-earns-200-million-in-first-month_SECVPF

போக்கிமோன் கோ விளையாட்டு ஒரு மாதத்தில் சுமார் ரூ.1336 கோடி வருவாய்

கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதேமாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக …