முக்கியச் செய்திகள்
Home / வணிக செய்திகள் / உலக வணிகம் / உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சீனாவின் முதல் ஜெட் விமானம் ARJ21; 70 பயணிகளுடன் சாங்காய் நகருக்கு வெற்றிகரமாக பறந்தது
201606281720445317_Chinas-1st-homemade-jet-makes-debut-commercial-flight_SECVPF

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சீனாவின் முதல் ஜெட் விமானம் ARJ21; 70 பயணிகளுடன் சாங்காய் நகருக்கு வெற்றிகரமாக பறந்தது

பீஜிங்,

விமானத் தயாரிப்பில் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளின் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ரஷ்யா அண்மையில் ஒரு பயணிகள் விமானத்தை உருவாக்கி அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில், சீனா முதல்முறையாக சர்வதேச தரத்தில் ஒரு பயணிகள் ஜெட் விமானத்தை உருவாக்கி அதை இன்று முதல் வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ARJ21 என்ற இந்த விமானத்தை தயாரிக்கும் முயற்சியை பல ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு துவங்கியிருந்தாலும் பாதுகாப்பு சோதனைகளை கடந்து உத்தரவாத சான்றிதழ்களை பெற தாமதமாகியிருக்கிறது.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் செங்டூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஜெட் விமானம் தயாரித்து வழங்கப்பட்டது. பல்வேறு சோதனைகளை கடந்து இன்று இந்த விமானம் முதல்முறையாக 70 பயணிகளுடன் வர்த்தக ரீதியாக செங்டூ சிட்டியில் இருந்து சாங்காய் நகரத்திற்கு வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

விரைவில், 7 முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில் இதுபோன்ற கூடுதல் விமானங்களை இயக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.

Check Also

201608081654498106_Pokemon-Go-earns-200-million-in-first-month_SECVPF

போக்கிமோன் கோ விளையாட்டு ஒரு மாதத்தில் சுமார் ரூ.1336 கோடி வருவாய்

கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதேமாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக …