முக்கியச் செய்திகள்
Home / வணிக செய்திகள் / உள்ளூர் வணிகம் / இயற்கை எரிவாயு கட்டணத்தில் குறைவை காணும் Enbridge வாடிக்கையாளர்கள்
enbridge-pipeline-720x480

இயற்கை எரிவாயு கட்டணத்தில் குறைவை காணும் Enbridge வாடிக்கையாளர்கள்

ரொறொன்ரோ Enbridge எரிவாயு விநியோகஸ்தர்களிடம் இருந்து சேவையினைப் பெறும் வாடிக்கையாளர்கள் இயற்கை எரிவாயு கட்டணக் குறைப்பின் பயனை அடைவார்கள் என Enbridge தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதியிலிருந்து புதிய கட்டணத்திற்கான ஒப்புதலை ஒன்ராறியோ சக்தி வாரியத்திடமிருந்து Enbridge பெற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், சாதாரண குடியிருப்புவாசிகள் மொத்த கட்டணத்தில் சுமார் 7 சதவிகிதம் அல்லது வருடத்திற்கு 63 டொலர்கள் கட்டணக் குறைப்பை அனுபவிக்க முடியும் என Enbridge தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பினால் Enbridge வாடிக்கையாளர்கள் நல்ல பயனை பெறுவர் என Enbridge எரிவாயு விநியோகஸ்த தலைமையதிகாரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

Check Also

201608081654498106_Pokemon-Go-earns-200-million-in-first-month_SECVPF

போக்கிமோன் கோ விளையாட்டு ஒரு மாதத்தில் சுமார் ரூ.1336 கோடி வருவாய்

கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதேமாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக …