முக்கியச் செய்திகள்
Home / வணிக செய்திகள் / உள்ளூர் வணிகம்

உள்ளூர் வணிகம்அமெரிக்காவிடம் 15 பில்லியன் டொலர்களை இழப்பீடு கோரும் டிரான்ஸ் கனடா

Trans-Canada-720x480

கனடாவின் எரிபொருள் நிறுவனமான ‘டிரான்ஸ் கனடா’, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து 15 பில்லியன் டொலர்களை இழப்பீட்டுத் தொகையாகக் கோரியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கீஸ்டோன் (Keystone) குழாய்த் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் நிராகரித்திருந்தார். இதனால் தமது நிறுவனம் பாரிய நட்டத்திற்கு உள்ளானதன் காரணத்தினாலேயே குறித்த இழப்பீட்டுத் தொகையைக் கோருவதாக டிரான்ஸ் கனடா நிறுவனம் கூறியுள்ளது. மசகு எண்ணெய்யை படிப்படியாக மெக்சிகோ வளைகுடாவிற்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு, கனடா மற்றும் …

மேலும் படிக்க »

இயற்கை எரிவாயு கட்டணத்தில் குறைவை காணும் Enbridge வாடிக்கையாளர்கள்

enbridge-pipeline-720x480

ரொறொன்ரோ Enbridge எரிவாயு விநியோகஸ்தர்களிடம் இருந்து சேவையினைப் பெறும் வாடிக்கையாளர்கள் இயற்கை எரிவாயு கட்டணக் குறைப்பின் பயனை அடைவார்கள் என Enbridge தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதியிலிருந்து புதிய கட்டணத்திற்கான ஒப்புதலை ஒன்ராறியோ சக்தி வாரியத்திடமிருந்து Enbridge பெற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில், சாதாரண குடியிருப்புவாசிகள் மொத்த கட்டணத்தில் சுமார் 7 சதவிகிதம் அல்லது வருடத்திற்கு 63 டொலர்கள் கட்டணக் குறைப்பை அனுபவிக்க முடியும் என Enbridge தெரிவித்துள்ளது. இந்த விலை …

மேலும் படிக்க »

ரொறன்ரோவில் வீடுகளின் விலைகள் 15 சதவீதத்தால் உயர்வு

toronto-real-estate-sign-torstar-image-720x480

ரொறன்ரோவில் வீடு விற்பனை ‘மே’ மாதத்தில், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 10.6 வீதம் அதிகரித்திருப்பதுடன், விலையும் 15.7 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவின் வீட்டு வாரியம் வெளியிட்ட அண்மைய புள்ளி விபரப்படி, ரொறன்டோவில் வீடொன்றின் பெறுமதி ஏழு இலட்சத்து 82 ஆயிரத்து 51 டொலர்களாகும். பிராந்திய ரீதியில், இதன் சராசரிப் பெறுமதி 7 இலட்சத்து 51 ஆயிரத்து 908 டொலர்களாகும். ஆனால், இந்த விலையேற்றம் வீடுகள் விற்பனைச் சந்தையில் …

மேலும் படிக்க »

எல்லைகளை கடந்து வரும் கனேடியர்களை கவர அமெரிக்கா புது முயற்சி!

mall-600x338-720x480

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள பல் கடைகள் அங்காடி ஒன்று நீண்ட வார இறுதிநாட்களில் கனடிய டொலர்களை அமெரிக்க டொலர்களிற்கு சமமாக ஏற்று கொள்ள முன்வந்துள்ளது. பல கடைகள் உணவகங்களை கொண்ட வாஷிங்டன், பெலிங்ஹாமில் அமைந்துள்ள பெலிஸ் வெயர் மோல், கோடைகாலம் பூராகவும், வரும் கனடிய நீண்ட வார இறுதி நாட்களில் இந்த உடன்பாட்டை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக பெருமளவில் கனடிய நுகர்வோர்களை நம்பியுள்ள இந்த பல் …

மேலும் படிக்க »

ஃபோர்ட் மெக்முர்ரே தீயால் கனடாவின் எண்ணெய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி

fire5-600x400-720x480

கனடாவின் அல்பேட்டா மாநிலத்தின் ஃபோர்ட் மெக்முர்ரே பிராந்தியத்தில் பரவிய பாரிய காட்டுத் தீ காரணமாக கனடாவின் மசகு எண்ணெய் உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநிலத்திலுள்ள எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையே இந்த வீழச்சிக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முழுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த தொழிற்சாலைகள் தமது பணிகளை ஆரம்பிக்கும் என அல்பேட்டா மாநில முதலமைச்சர் ரேச்சல் நொட்லி கூறியுள்ளார். நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் …

மேலும் படிக்க »

மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி : அல்பேட்டாவில் பெரும் எண்ணிக்கையிலானோர் வேலை இழப்பு

Unemployment-720x480

மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக ஏனைய மாகாணங்களைவிட அல்பேட்டாவிலேயே பெரும் எண்ணிக்கையிலான வேலைகள் இழக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் வேலையில்லாமை விகிதம் கடந்த மாதம் 7.1 சதவீதத்தில் நிலைகொண்டுள்ளது. பெப்ரவரி மாதத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் வேலையில்லாமை விகிதத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. குறிப்பிட்ட இக்கால எல்லையில் சுமார் இரண்டாயிரத்து நூறு பேர் தமது நிரந்தர வேலையை இழந்திருந்தனர்.  

மேலும் படிக்க »

உபர் சவாரி பகிர்வு சேவை சட்டமூலம் ரொறன்ரோவில் நிறைவேற்றம்

Toronto-mayor-01-720x480

ரொறன்ரோ நகரசபை உறுப்பினர்கள் உபர் போன்ற சவாரி பகிர்வு சேவைகள் தொடர்பான சட்டமூல முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலம் அச்சட்டம் நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தரைப் பேக்குவரத்து விதிமுறைகளை உள்ளடக்கி, குறிப்பிட்ட எண்ணிக்கையான சட்டமூலப் பரிந்துரைகளை ரொறன்ரோ நகரமேயர் யோன் ரொறி முன்வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) அது தொடர்பான வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த பரிந்துரைகள் நகர பிதா யோன் ரொறியினால் முன்வைக்கப்பட்டது. எனினும் அவற்றில் சிலவற்றை …

மேலும் படிக்க »

சுய தொழிலில் ஈடுபடுவர்களுக்கான வரி செலுத்தும் இறுதித் திகதி ஜுன் 15

CCTB

கனடாவில் சுய தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கான மீதம் உள்ள வரியை செலுத்துவதற்கான கால எல்லை எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பொதுவான வரி செலுத்துவதற்கான இறுதி கடந்த இரண்டாம் திகதியுடன் நிறைவடைந்தது. குறிப்பாக கடந்த 30ஆம் திகதியுடன் வரி செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்தது. எனினும்;, 30ம் திகதி சனிக்கிழமை என்ற காரணத்தினால், அந்த கால எல்லை இரண்டாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது. குறித்த கால எல்லைக்குள் …

மேலும் படிக்க »

மொன்றியலின் இலகு புகையிரத போக்குவரத்து வலையமைப்பு திட்டத்திற்கு புதிய முதலீடு

Montreal-light-rail-transport-network-720x480

மொன்றியலின் ஓய்வூதிய நிதியம் மூலம் அப்பகுதியின் பெரும்பாகத்தை உள்ளடக்கிய பகுதிகளில் மின்சார இலகு புகையிரத போக்குவரத்து வலையமைப்பை ஏற்படுதும் திட்டம் ஒன்றை மாநில அரசாங்கம் முன்வைத்துள்ளது. கியூபெக் ஓய்வூதிய நிதியின் முதலீட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறித்த திட்டத்தின் மூலம், ரூடோ விமான நிலையத்தில் இருந்து கியூபெக்கின் தெற்குக் கரையில் உள்ள லாவல் பகுதிவரையில் உள்ள நகரின் 24 நிலையங்களை இணைத்து மொன்றியலின் சுமார் 67 கீலோ மீற்றர் தூரத்திற்கு இந்த இலகு …

மேலும் படிக்க »

வன்கூவர் – புது டெல்லிக்கு இடை நிறுத்தம் அற்ற நேரடி விமானச் சேவை!

tms-720x480

வன்கூவருக்கும் இந்தியத் தலைநகர் புது டெல்லிக்கும் இடையேயான இடை நிறுத்தம் அற்ற நேரடி விமானச் சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக எயார் கனடா அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து இந்த சேவை ஆரம்பமாகவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பயணச் சேவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ரொரன்ரோவுக்கும் புது டெல்லிக்கும் இடையேயான நேரடி விமானச் சேவைகளை வழங்கிவரும் எயார் கனடா, அந்த சேவைகளை …

மேலும் படிக்க »