முக்கியச் செய்திகள்
Home / சர்வதேச செய்திகள்

சர்வதேச செய்திகள்ஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

article-doc-e68of-268QLjqAsc11fa99818284c81dfd-720_634x422

சவுதி கூட்டுப்படை ஏமனில் நடத்திய தாக்குதலில், தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொது மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் ஐ.நா. நடத்திய அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில்,சவுதி கூட்டுப்படை சனாவில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை …

மேலும் படிக்க »

தாய்லாந்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும்: ராணுவ ஆட்சியாளர் அறிவிப்பு

201608091810030867_Thailand-to-hold-election-in-2017-military-ruler_SECVPF

பாங்காங், தாய்லாந்தில் 1938-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு பின் ஜனநாயக முறையில் பொறுப்பேற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதற்காக 19 முறை அரசியல் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட போதிலும் அவை மக்களுக்கு பயன் அளிக்காத நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், மீண்டும் தாய்லாந்தில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டுவரும் வகையில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய அரசியல் அமைப்பை ராணுவ …

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் பயங்கரம் ஆஸ்பத்திரிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்; 55 பேர் பலி 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம்

201608090534427177_Terror-in-Pakistan-suicide-attack-aspattirikkul-55-people_SECVPF

குவெட்டா, பாகிஸ்தானின் குவெட்டா நகர ஆஸ்பத்திரிக்குள் தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். இதில் வக்கீல்கள் உள்பட 55 பேர் பலியாயினர். தற்கொலைப்படை தாக்குதல் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான ‘குவெட்டா’வில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குள் நேற்று காலை 11 மணி அளவில் தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் புகுந்தான். அவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டவாறே உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். அந்த குண்டுகள் பயங்கர …

மேலும் படிக்க »

ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதை முறைப்படி ஏற்றுக்கொண்டார் ஹிலாரி கிளிண்டன்

201607291035188045_Hillary-Clinton-Accepts-Democratic-Presidential-Nomination_SECVPF

வாஷிங்டன், அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால்,  புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (வயது 70) சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.  அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை (68), பிலடெல்பியாவில் நடந்த கட்சி மாநாட்டில் முறைப்படி நியமித்து நேற்று முன் தினம் …

மேலும் படிக்க »

சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர்

201607291558318185_IS-executes-24-civilians-after-seizing-Syria-village-monitor_SECVPF

பெய்ரூ, சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர் என்று கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. வடக்கு சிரியாவில் குர்திஷ் – அரபியக் கூட்டணி படையிடம் இருந்து புயிர் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 மணி நேரத்தில் 24 பேரை படுகொலை செய்து உள்ளனர் என்று சிரியாவை சேர்ந்த கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது. சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து …

மேலும் படிக்க »

இந்தோனேஷியாவில் இந்தியர் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை திடீர் நிறுத்தம்?

201607290951268004_Indonesia-executes-foreign-convicts-despite-protests_SECVPF

சிலாகப், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதில் இந்தோனேசியா விடாப்பிடியாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் அதிபர் ஜோக்கோ ஜூடோடோ இதில் சமரசம் செய்து கொள்வதே இல்லை.அந்த வகையில் அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் 14 பேரில் வெளிநாட்டினர் பெரும்பாலனோர் அடங்கியிருந்தால் இந்த விவகாரம் உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …

மேலும் படிக்க »

ஹிலாரியை ஜனாதிபதியாக தேர்ந்தெடுங்கள் அமெரிக்க மக்களுக்கு ஒபாமா அழைப்பு

201607290219171448_Obama-calls-for-US-residents_SECVPF

பிலடெல்பியா, ஹிலாரியை விட வேறு எந்த ஆணும், பெண்ணும் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை, அவரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுங்கள் என்று அமெரிக்க மக்களுக்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டில் ஒபாமா பேச்சு அமெரிக்காவில் பிலடெல்பியாவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார். ஜனாதிபதி தேர்தலில் அவர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இத்தனை பெரிய கூட்டத்தில் …

மேலும் படிக்க »

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் பதவியேற்பு

Queen_Elizabeth_II_welcomes_Theresa_May_at_the_start_of_an_audience_in_Buckingham_Palace_L-large_trans__piVx42joSuAkZ0bE9ijUnFGe0z9p1LAF7TfYUjaG654

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் மகாராணியால் நியமிக்கப்பட்டுள்ளார். தெரேசா மே பிரித்தானியாவின் 24 ஆவது பிரதமாராகும்.இதன் மூலம் அந்­நாட்டின் இரண்­டா­வது பெண் பிர­தமர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.    

மேலும் படிக்க »

வெளிப்படைத்தன்மை பற்றிய விவாதத்தால் பலன் இல்லை ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் ரகசிய ஓட்டு

201607140302370436_There-is-debate-about-the-transparency-of-the-results-of-the_SECVPF

நியூயார்க், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31–ந்தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. ஒரு பெண் முதன் முதலாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது பான் கி மூன் விருப்பம். அந்த வகையில், ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 193 நாடுகளை கொண்ட …

மேலும் படிக்க »

சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில் ‘வான் பாதுகாப்பு வளையம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு’ சீனா அறிவிப்பு

201607140306038699_In-the-disputed-South-China-Sea-area-Air-security-ring-has_SECVPF

பீஜிங், சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் வான் பாதுகாப்பு வளையம் அமைக்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்று சீனா கூறுகிறது. சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தென் சீனக்கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடி, ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு சீனா செயற்கை தீவுகளையும், ராணுவ நிலைகளையும் அமைத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தென் சீனக்கடலில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற …

மேலும் படிக்க »